கடலூரில் கொத்தடிமை தொழிலாளர் அமைப்பு பற்றிய சட்ட விழிப்புணர்வு வாகனம்

கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளர் அமைப்பு பற்றிய சட்ட விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்தார்.

Update: 2021-10-03 16:53 GMT
கடலூர்,

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டும், 25-வது தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு தினத்தையொட்டியும் கொத்தடிமை தொழிலாளர் அமைப்பு பற்றிய சட்ட விழிப்புணர்வு திட்ட வாகனம் தொடக்க நிகழ்ச்சி கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பாக்கியம் வரவேற்றார். விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட முதன்மை நீதிபதி ஜவகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 இதில் நீதிபதிகள் சுபா அன்புமணி, உத்தமராஜா, பாலகிருஷ்ணன், சிவபழனி, கமலநாதன், வக்கீல் சங்க தலைவர் சுந்தரமூர்த்தி மற்றும் தன்னார்வலர் அமிர்தவல்லி, சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு வாகனம் சிறுவத்தூர், திருவாமூர், மனம்தவிழ்ந்தபுத்தூர், வீரப்பார் ஆகிய கிராமங்களுக்கு சென்று சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிறைவு நிகழ்ச்சி பண்ருட்டியில் நடந்தது. இதில் சார்பு நீதிபதி ராஜ்குமார், வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு கவுரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்