‘வேறு மாநிலத்தில் வசிப்பவர்கள் அங்குள்ள பிராந்திய மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்’ - மோகன் பகவத்
அனைத்து இந்திய மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் உண்டு என்று மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.;
ராய்ப்பூர்,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு, பிராந்திய மொழிகளுக்கு பதிலாக இந்திக்கு முன்னுரிமை அளிக்க முயற்சிப்பதாக பல்வேறு மாநில கட்சிகள், குறிப்பாக தென்னிந்தியாவைச் சேர்ந்த கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பேசிய அவர், “குறைந்தபட்சம் நம் வீடுகளுக்குள்ளாவது, நாம் நம் தாய்மொழியில் பேச வேண்டும். வேறொரு மாநிலம் அல்லது பிராந்தியத்தில் வசிப்பவர்கள், அந்த மாநிலம் அல்லது பிராந்தியத்தின் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அனைத்து மொழிகளும் இந்தியாவின் தேசிய மொழிகள்தான். அவை அனைத்திற்கும் சமமான முக்கியத்துவம் உண்டு” என்று தெரிவித்தார்.