2025ம் ஆண்டில் திருப்பதி லட்டு விற்பனை அமோகம்

டிசம்பர் 27-ம் தேதி மட்டும் அதிகபட்சமாக 5.13 லட்சம் லட்டுகளை பக்தர்கள் வாங்கி உள்ளனர்.;

Update:2026-01-01 20:02 IST

திருப்பதி,

2025-ம் ஆண்டில் திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு விற்பனை குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் மொத்தம் 13.52 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டுகளை விட மிகப்பெரிய வளர்ச்சியாகக் கூறப்படுகிறது.2024ம் ஆண்டில் மொத்த லட்டு விற்பனை 12.15 கோடியாகவும், 2025-ல் 13.52 கோடியாகவும் உள்ளது. இது, 1.37 கோடி அதாவது 10 சதவீதம் அதிகளவு விற்பனையாகும்.இதேபோல், 2024-ம் ஆண்டில் 2.55 கோடியாக இருந்த பக்தர்களின் வருகை, 2025ம் ஆண்டில் 2.70 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த டிசம்பர் 27, 2025 அன்று ஒரே நாளில் மட்டும் 5.13 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத ஒரு நாள் சாதனையாகும்.பக்தர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய, ஒரு நாளைக்குச் சராசரியாக 4 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. விசேஷ நாட்களில் இது 8 முதல் 10 லட்சம் வரை அதிகரிக்கப்படுகிறது.

2024-ல் எழுந்த நெய் கலப்பட சர்ச்சைகளுக்குப் பிறகு, 2025-ல் தரக் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. புதிய ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு, லட்டுகளின் தரம் உறுதி செய்யப்பட்டதால் பக்தர்களின் நம்பிக்கை மற்றும் வரவேற்பு அதிகரித்துள்ளதாகத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்