மீண்டும் ஒற்றைக் கொம்பு யானை நடமாட்டம்

காவலூர் பகுதியில் மீண்டும் ஒற்றைக் கொம்பு யானை நடமாடி வருகிறது.

Update: 2022-05-18 16:57 GMT
வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தை அடுத்த காவலூர், ஜமுனாமத்தூர் மலைப்பகுதியில் ஒற்றைக்கொம்பு யானை ஒன்று விவசாய நிலத்தில் புகுந்து விவசாய பயிர்களை சேதம் ஏற்படுத்தி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக யானை சுற்றி வரும் நிலையில் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தும், வனத்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காவலூர் பகுதி கிருஷ்ணாபுரம், பழையூர், அருணாசல கொல்லகொட்டாய் போன்ற பகுதியில் சுற்றி வருகிறது. இந்தப் பகுதியில் உள்ள தென்னை, வாழை, மா மரங்களை சேதப்படுத்தி வருகிறது. எனவே மாவட்ட வனத்துறை மூலம் இந்த ஒற்றைக்கொம்பு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு மலைவாழ் மக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

மேலும் செய்திகள்