அரவக்குறிச்சி தொகுதியில் ரூ.2 ஆயிரம் நோட்டு டோக்கன்: திமுக மீது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

அரவக்குறிச்சி தொகுதியில் ரூ.2 ஆயிரம் நோட்டு ஜெராக்ஸ் எடுத்து டோக்கன் வழங்கப்படுவதாக திமுக மீது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2019-05-19 08:03 GMT
அரவக்குறிச்சி,

அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

ஆர்.கே.,நகரில் இது போல அ.ம.மு.க.,வில் இருந்தபோது டோக்கன் கொடுத்து பழகியவர் செந்தில் பாலாஜி. இப்போது அரவக்குறிச்சியிலும், தி.மு.க., ஒன்றிய பொருளாளர் ஜெகநாதன் என்பவர் மூலம், 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து டோக்கன் தருகின்றனர்.

மாலை 3 மணிக்கு டோக்கனுக்கு பணம் தருவதாகவும், தேர்தல் முடிந்த பிறகு பணம் தருவதாகவும் பல இடங்களில் கூறி வருகின்றனர். மேலும், புகளூர் நால்ரோடு, காந்திநகர் மற்றும் முல்லை நகர் உள்ளிட்ட இடங்களில், வாக்காளர்களை இதுவரை ஓட்டுப்போட விடாமல் தடுத்து வைத்துள்ளனர்.

அரவக்குறிச்சி வேலாயுதம்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ.2 ஆயிரம் நோட்டு ஜெராக்ஸ் எடுத்து டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. போலீசில் புகார் கொடுத்தும் போதிய நடவடிக்கை இல்லை. வாக்களிக்க விடாமல் பெரும்பாலான மக்களை திமுகவினர் அடைத்து வைத்துள்ளனர். தோல்வி பயத்தால், மக்களை திசை திரும்பும் செயலில் திமுக ஈடுபட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்