டெல்லியில் ரிசர்வ் வங்கி அருகே இளம்பெண் அரை நிர்வாணப்போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

டெல்லியில் ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் பெண் ஒருவர் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாததால் அந்த விரக்தியில் இளம்பெண் ஒருவர் அரை நிர்வாணபோராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2017-01-04 15:15 GMT
புதுடெல்லி,

டெல்லியில் ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் பெண் ஒருவர் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாததால் அந்த விரக்தியில் இளம்பெண் ஒருவர் அரை நிர்வாணபோராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8-ந் தேதி ரூ-500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி களில் டிசம்பர் 31-ந் தேதி வரை கொடுத்து மாற்றிக் கொள் ளலாம் என்று அவகாசம் அளிக்கப் பட்டு காலக்கெடு முடிந்துவிட்டது. அந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் ரிசர்வ் வங்கியில் மார்ச் மாதம் வரை கொடுத்து மாற்றலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் ஏழை பெண் ஒருவர் குழந்தையுடன் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக அலுவலகத்திற்கு வந்தார். அந்த பெண்ணை உள்ளே விட  அனுமதிக்க காவலாளிகள் மறுத்துவிட்டனர். அதனை தொடர்ந்து தான் வைத்திருந்த பழைய நோட்டுகளை மாற்றி தருமாறு அங்கிருந்த காவலர்களிடம் அவர் கெஞ்சி கேட்டுக்கொண்டார். இதனை ஏற்காத காவலாளிகள், அந்த பெண்ணை விரட்டி அடிப்பதிலேயே குறிக்கோளாக இருந்தனர்.

இதனால் விரக்தி அடைந்த அந்த பெண், பழைய ரூபாய் நோட்டுகளை வைத்து கொண்டு புலம்பிகொண்டு இருந்தார். திடீரென தனது மேலாடையை கழற்றிவிட்டு அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பெண் ஒருவர் மேலாடை இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பாதசாரிகள்,வங்கி ஊழியர்கள், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் போராட்டம் நடத்திய பெண்ணை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்