ஆசிரியர் துன்புறுத்துவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு பிளஸ் 1 மாணவி தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

மாணவி எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-11-21 20:07 IST

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் ரிவா மாவட்டம் சிமாரியா பகுதியை சேர்ந்த சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இதனிடையே, மாணவியை வகுப்பு ஆசிரியர் துன்புறுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாடம் சரியாக படிக்கவில்லை என கூறி மாணவியை அந்த ஆசிரியர் கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், தண்டனை என்ற பெயரில் மாணவியை துன்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில், ஆசிரியரின் துன்புறுத்தலால் மன உளைச்சல் அடைந்த பிளஸ் 1 மாணவி கடந்த 16ம் தேதி இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக்கு ஆசிரியரின் தொடர் துன்புறுத்தலே காரணம் என மாணவி கடிதம் எழுதி வைத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவி எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றி அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்