வங்காளதேசத்தில் நிலநடுக்கம்:கொல்கத்தாவில் ஏற்பட்ட நில அதிர்வால் மக்கள் பீதி

வங்காள தேச தலைநகர் டாக்கா அருகே இன்று (வெள்ளிக்கிழமை) ரிக்டர் அளவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.;

Update:2025-11-21 12:06 IST

கொல்கத்தா,

வங்காள தேச தலைநகர் டாக்கா அருகே இன்று (வெள்ளிக்கிழமை) ரிக்டர் அளவில் 5.7 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள நர்சிங்டி பகுதியில் இருந்து தெற்கு-தென்மேற்கில் 13 கிலோமீட்டர் தூரத்தில் இன்று காலை 10.08 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது புவியின் மேற்பரப்பில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.

முன்னதாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் இந்த நிலநடுக்கம் காரணமாக இந்தியாவின் கொல்கத்தா மற்றும் வடகிழக்குப் பகுதிகளின் பல இடங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி கொல்கத்தா மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வலுவான நில அதிர்வுகள் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியில் உறைந்தனர். பலரும் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வேகமாக வெளியே ஓடிவந்தனர். இதேபோல் கவுகாத்தி, அகர்தலா, ஷில்லாங் உள்ளிட்ட இடங்களிலும் லேசான நில அதிர்வு பதிவாகி உள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக இந்தியாவில் இதுவரை யாருக்கும் எந்தவித காயங்களும், பாதிப்பும் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்