அசாமில் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் பலி துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டம் ஜகுன் பகுதி அருணாசல பிரதேச மாநில எல்லையில் அமைந்து உள்ளது. இங்கு பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்போடு சுற்றுலாப்பயணிகள் நேற்று வாகனத்தில் சென்றனர்.;

Update:2017-01-23 02:16 IST
கவுகாத்தி,

அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டம் ஜகுன் பகுதி அருணாசல பிரதேச மாநில எல்லையில் அமைந்து உள்ளது. இங்கு பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்போடு சுற்றுலாப்பயணிகள் நேற்று வாகனத்தில் சென்றனர். அப்போது மறைந்து இருந்த பயங்கரவாதிகள் திடீரென வாகனத்தை நோக்கி கையெறி குண்டுகளை வீசி எறிந்தனர். மேலும் துப்பாக்கியாலும் சுட்டனர்.

இந்த தாக்குதலில் வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். உடனே வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். தப்பி ஓடிய பயங்கரவாதிகளை ஹெலிகாப்டர் மூலமாக தேடும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட ‘உல்பா’ அமைப்பு பொறுப்பு ஏற்று உள்ளது.

குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று ராணுவ செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்