பயங்கரவாத தாக்குதல்: ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை
பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.;
டெல்லி,
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் சிட்னி நகரில் போண்டி கடற்கரை பகுதியில் நேற்று யூத மதத்தின் ஹனுக்கா பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான யூதர்கள் பங்கேற்றனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகளான சஜீத் அக்தர் மற்றும் அவரது மகன் நவீத் அக்தர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி பென்னி வாங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினர். பயங்கரவாத தாக்குதலை சந்தித்த ஆஸ்திரேலியாவுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.