டெல்லியில் கடும் பனிமூட்டம்: ரெயில், விமான சேவை பாதிப்பு
வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது.;
டெல்லி,
தலைநகர் டெல்லி உள்பட பல்வேறு வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக, காலை நேரங்களிலும், மாலை நேரங்களில் பனிமூட்டம் அதிகமாக உள்ளது. அதேவேளை, டெல்லியில் காற்று மாசுபாடும் அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அவதியடைந்துள்ளனர்.
இந்நிலையில், கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் ரெயில், விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பனி மூட்டம், போதிய வெளிச்சமின்மையால் டெல்லியில் 66 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பல விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், பல ரெயில்களும் கால தாமதமாக புறப்பட்டன. இதனால், பயணிகள் அவதியடைந்தனர்.