உத்தரகாண்ட்,உத்தரபிரதேசம்,கோவாவை தொடர்ந்து மணிப்பூரிலும் பாஜக ஆட்சி
மணிப்பூரிலும் பாஜக வினர் கவர்னரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளனர்.;
இம்பால்,
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மொத்தமுள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் ஆளும் காங்கிரஸ், பா.ஜனதா, நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. தேர்தலில் பதிவான வாக்குகள் காங்கிரஸ் கட்சி 28 இடங்களை கைப்பற்றியது. பா.ஜனதா 21 இடங்களில் வெற்றி பெற்று 2–ம் இடத்தை பெற்றது. நாகா மக்கள் முன்னணி 4 தொகுதிகளையும், தேசிய மக்கள் கட்சி 4 இடங்களையும் கைப்பற்றின. லோக் ஜனசக்தி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சுயேச்சை தலா 1 இடங்களில் வெற்றி பெற்றன.
இந்நிலையில் பா.ஜ.,விற்கு நாகா மக்கள் கூட்டணி , தேசிய மக்கள் கட்சியினர், மற்றும் சில சுயேட்சைகள் ஆதரவு தர முன்வந்துள்ளனர். இதனால் ஆட்சி அமைக்க போதுமான ஆதரவு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்று ( 12-ம் தேி) இரவு 9 மணியளவில் பா.ஜ.,வினர் கவர்னர் நஜ்மா ஹெப்துல்லாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.