‘போர்களை விட சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன’ - மத்திய மந்திரி நிதின் கட்கரி

சாலை விபத்துகளில் அதிகமாக இளம் வயதினர் உயிரிழக்கின்றனர் என்று நிதின் கட்கரி வேதனை தெரிவித்துள்ளார்.;

Update:2025-12-18 21:39 IST

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்கரி பேசியதாவது;-

“மிகுந்த வருத்தத்துடன் நான் இதை சொல்ல வேண்டியிருக்கிறது, சாலை விபத்துக்கள் மனிதர்களின் நடத்தையுடன் தொடர்புடையவை. சாலை பாதுகாப்பு விதிகள் மதிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் சுமார் 1.80 லட்சம் உயிர்கள் பலியாகின்றன. இது எந்தவொரு போர் அல்லது கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட அதிகம். சாலை விபத்துகளில் அதிகமாக இளம் வயதினர் உயிரிழக்கின்றனர்.

சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவத மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் பல்வேறு பிரசாரங்களை மேற்கொண்டபோதிலும், சாலைகளில் மக்களின் நடத்தையில் பெரிய முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை. இந்த பிரச்சினையை கையாள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து ஆலோசனைகளை பெறும் வகையில், சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஒரு தனி விவாதத்தை நடத்துமாறு சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்