டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.;

Update:2017-10-17 18:57 IST
புதுடெல்லி,

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்குவை கட்டுப்படுத்த அரசும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. டெங்குவுக்கு குழந்தைகளும், பெரியவர்களும் உயிரிழந்துள்ளனர்.   தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 40 பேர் பலியாகிவிட்டனர். 80 பேர் வகைப்படுத்தப்படாத காய்ச்சலுக்கு பலியாகிவிட்டனர் என  தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தொடர்பான பாதிப்புகள் குறித்து  அதனை பார்வையிட வந்த மத்திய அரசு அதிகாரிகளைக் கொண்ட குழு கூறியுள்ளது.

டெங்கு காய்ச்சலால் ஏற்படும் மரணத்தை தடுக்கும் முறை மற்றும் டெங்கு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளோம். விரைவில் டெங்கு கட்டுப்படுத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இந்நிலையில்  மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி,

அக். 15ம் தேதி கணக்கின்படி, தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 12,945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 40 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம், டெங்கு பாதிப்பு எண்ணிக்கையில் 3ம் இடம் என கூறியுள்ளது.

இதே போன்று கேரளாவில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் திருவனந்தபுரம் (8,324), கொல்லம் (2,752), ஆலப்புழா (1,293), கோழிக்கோடு (1,292), திரிசூர் (841) என்றும்,கர்நாடகாவில் மாண்டியாவில் (824), களுபர்காகி (770), தாவண்கரே (756) மற்றும் மைசூரு (757) ஆகியோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் செய்திகள்