ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி கிடையாது - ரிலையன்ஸ் தகவல்

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி கிடையாது என ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.;

Update:2026-01-07 23:32 IST

புதுடெல்லி,

இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் நயாரா என்ற பெயரில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வந்தது. அதிகபட்சமாக ரஷியாவின் முன்னணி கச்சா எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெப்ட் மற்றும் லூக்காயில் ஆகியவற்றிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது.

கடந்த ஆண்டில் ரஷியா கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைவிதித்தது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனம் ரஷிய கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது. இருப்பினும் ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்து ரஷிய நிறுவனங்களின் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதாக வெளிநாடுகளில் செய்திகள் வெளியாகி வந்தன.

இதனை ரிலையன்ஸ் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து ரிலையன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 3 மாதங்களாக ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது கிடையாது. இந்த மாதத்திலும் (ஜனவரி) ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் எண்ணம் இல்லை” என கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்