52 வயதிற்குள் 51 பணியிட மாற்றம் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிக்கு நேர்ந்த அவலம்

அரியானவை சேர்ந்த 52 வயது ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா தனது பத்வி காலத்தில் 51 முறை பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.;

Update:2017-11-13 13:58 IST
அரியானாவை சேர்ந்த அசோக் கெம்கா மிகவும் நேர்மையான ஐ.ஏஎஸ் அதிகாரியாக அறியப்படுவர். இவர் தனது 52 வயதிற்குள் 51  முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரியானாவில் எந்த அரசு வந்தாலும்  இவர் பந்தாடப்படுவது வழக்கம். தற்போது பாரதீய ஜனதாவால் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

கெம்கா தனது 51 வது இடமாற்றம் குறித்து டுவிட்டரில் பதிவு செய்து உள்ளார்.

பணி மிகவும்  திட்டமிட்டது. மற்றொரு இடமாற்ற  செய்தி. மறுபடியும் ஒரு விபத்து ஆனால் இது தற்காலிகமானது. புதுப்பிக்கப்பட்ட வீரியமும் ஆற்றலும் தொடரும். என அவர் கூறி உள்ளார்.

அரியானா பாரதீய ஜனதாவின் முதல்வர் மனோகர் லால் கத்தார் அரசால் பணிமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். தற்போது அவர் மாற்றப்பட்டு இருப்பது  அரியானா விளையாட்டு அமைச்சர் அனில் விஜ் கீழ் செயல்பட. இதற்கு முன் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறைகளில் பிரதான செயலாளராக பணியாற்றி வந்தார்.

குறிப்பாக,  கெம்கா முதல்வர் எம்.எல். கத்தாரின் தனிப்பட்ட ஊழியர்களுக்கு தீபாவளிக்கு முன் போனஸ்  அளிக்கப்படுவதாக சமீபத்தில் ஒரு புகார் தெரிவித்து இருந்தார். கத்தாரின் தனிப்பட்ட ஊழியர்களுக்கு ஒரு சிறப்பு தீபாவளி போனஸ் அனுமதிப்பதற்காக, முதலமைச்சரின் அலுவலகத்தை கெம்கா கேலி செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்