பெங்களூரு புறப்பட்ட இண்டிகோ விமானம் வாரணாசியில் அவசர அவசரமாக தரையிறக்கம்

விமானத்தில் 216 பேர் பயணித்தனர்;

Update:2026-01-12 18:46 IST
 

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து கர்நாடகாவின் பெங்களூருவுக்கு நேற்று இரவு இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானத்தில் 216 பேர் பயணித்தனர்.

விமானம் உத்தரபிரதேச வான்பரப்பில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானத்தில் பறவைகள் மோதின. இதனால், விமானத்தின் புகப்பு பகுதி சிறிது சேதமடைந்தது. இதையடுத்து, விமானத்தை உடனடியாக உத்தரபிரதேசத்தின் வாரணாசி விமான நிலையத்தில் விமானி தரையிறக்கினார். இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதையடுத்து மாற்று விமானம் மூலம் பயணிகள் பெங்களூரு அனுப்பி வைக்கப்பட்டனர்.    

Tags:    

மேலும் செய்திகள்