பிப்.1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்; மக்களவை சபாநாயகர் அறிவிப்பு

பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் தொடங்குகிறது.;

Update:2026-01-12 17:38 IST

டெல்லி,

மத்திய பட்ஜெட் ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2026-27ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று அறிவித்துள்ளார்.

அதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 28ம் தேதி தொடங்குகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்க நாளில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் சேர்ந்த கூட்டு அவை ஜனாதிபதி உரையுடன் தொடங்குகிறது. ஜனாதிபதி திரவுபதி முர்மு துவக்க உரையாற்றி பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கி வைக்கிறார். ஜனாதிபதி உரைக்குப்பின் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறார்.

இதனை தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதையடுத்து, பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் முதற்கட்டமாக பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்பின்னர், மீண்டும் மார்ச் 9ம் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்