டெல்லி-விஜயவாடா ஏர் இந்தியா விமானம் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டது

விமானம் ஜெய்ப்பூரை அடைந்ததும், அந்த பயணி விமானத்தில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.;

Update:2026-01-12 14:11 IST

புதுடெல்லி,

நாட்டின் தலைநகர் டெல்லியில் இருந்து விஜயவாடா நோக்கி இன்று காலை ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்நிலையில், ஏ.ஐ. 2517 என்ற எண் கொண்ட அந்த விமானத்தில் பயணித்த வயது முதிர்ந்த நபர் ஒருவருக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.

இதனால், விமானம் ஜெய்ப்பூர் நகருக்கு திருப்பி விடப்பட்டது. விமானம் ஜெய்ப்பூரை அடைந்ததும், அந்த பயணி விமானத்தில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதன்பின்பு விமானம் மீண்டும் விஜயவாடாவுக்கு புறப்பட்டு சென்றது.

எனினும், விமானத்தில் பயணித்தவர்களின் விவரங்கள் பற்றிய தகவல்கள் உடனடியாக தெரிய வரவில்லை. ஏர் இந்தியா விமான நிறுவனம், வேறு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்