எனது கடிதங்களுக்கு ஒருபோதும் மோடி பதில் அளிப்பது இல்லை, பிரதமர் என்ற அகந்தையில் உள்ளார்: அன்னா ஹசாரே

மக்கள் பிரச்சினைக்காக நான் எழுதிய கடிதங்களுக்கு பிரதமர் மோடி ஒரு போதும் பதில் அளிப்பது இல்லை என்று அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். #annahazare | #pmmodi

Update: 2018-01-22 04:47 GMT
புதுடெல்லி,

ஊழலுக்கு எதிராக போராடி வரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, பிரதமர் மோடி அகந்தையில் உள்ளதாகவும், இதன் காரணமாகவே தனது கடிதங்களுக்கு பதில் அளிப்பது இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 

மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அன்னா ஹசாரே கூறியதாவது:-  ”லோக்பால் நடைமுறை, லோக்அயுக்தா நியமனம், விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் பென்ஷன் மற்றும் விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 3 ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்ட கடிதங்களை பிரதமர் மோடிக்கு அனுப்பினேன்.

ஆனால், அவர் ஒருபோதும் பதில் அளிக்கவில்லை. பிரதமர் மோடி அகந்தையில் இருக்கிறார். இதன் காரணமாகவே, எனது கடிதங்களுக்கு மோடி பதில் அனுப்புவதில்லை” இவ்வாறு அன்னா ஹசாரே தெரிவித்தார்.

மேலும் செய்திகள்