இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து காலமானார்
அறிவியல், விண்வெளி தொடர்பாக பல புத்தகங்கள், கட்டுரைகளை நெல்லை சு.முத்து எழுதியுள்ளார்.;
திருவனந்தபுரம்,
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து, திருவனந்தபுரத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உடன் பணியாற்றியவர் ஆவார்.
மேலும் அறிவியல், விண்வெளி தொடர்பாக பல புத்தகங்கள், கட்டுரைகள் உள்ளிட்டவற்றை நெல்லை சு.முத்து எழுதியுள்ளார். இவரின் 4 புத்தகங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சிறந்த நூலாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.