மந்திரிசபை செயலகத்தின் செயலாளராக ஆர்.ஏ.சந்திரசேகர் நியமனம்
மந்திரிசபை செயலகத்தின் செயலாளராக ஆர்.ஏ.சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.;
புதுடெல்லி,
மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.ஏ.சந்திரசேகர், மந்திரிசபை செயலகத்தின் செயலாளராக (பாதுகாப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்துக்கு மத்திய மந்திரிசபையின் நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆகஸ்டு 1-ந் தேதி அல்லது அதற்கு பிறகு அவரது நியமனம் அமலுக்கு வரும். தற்போது அப்பதவியில் உள்ள ஹரிநாத் மிஸ்ரா அடுத்த மாத இறுதியில் ஓய்வு பெற்ற பிறகு, சந்திரசேகர் அப்பொறுப்பை ஏற்பார். அவர் கேரள பிரிவைச் சேர்ந்த 1991-ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார்.
பிரதமர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்பு குழுவின் நிர்வாக தலைவராக மந்திரிசபை செயலக செயலாளர் (பாதுகாப்பு) இருப்பார். இதுபோல், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் சிறப்பு தலைமை இயக்குனர் சுனில்குமார் ஜா, தீயணைப்பு படை தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.