காதலியை சுத்தியலால் அடித்து கொன்றவர் கைது
சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.;
மும்பை,
மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆதாம்கஸ் பதான். இவர் கடந்த 2018-ம் ஆண்டு தனது மனைவியை கொன்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அண்மையில் அவர் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தார். இவர், அதே பகுதியை சேர்ந்த சுமன் சர்கார்(வயது38) என்ற பெண்ணை காதலித்து வந்தார். கடந்த 12-ந்தேதி ருக்டிபாட்டா பகுதியில் உள்ள லாட்ஜில் காதலியை சந்தித்துள்ளார். அப்போது அங்கு நிதி பரிவர்த்தனை தொடர்பாக 2 பேருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆதாம்கஸ் பதான் தான் வைத்திருந்த சுத்தியலால் காதலி சுமன் சர்காரை சரமாரியாக தாக்கினார்.
இந்த சம்பவத்தில் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்த லாட்ஜ் ஊழியர்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்த சுமன் சார்காரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிஓடிய ஆதாம்காஸ் பதானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.