பட்ஜெட் 2018 தென்னிந்தியா புறக்கணிப்பா?
2018 பட்ஜெட்டில் தென்னிந்தியா மிகவும் அதிக அளவில் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. தென்னிந்தியாவில் இருக்கும் மூன்று மாநிலங்களுக்கு முக்கியமான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. #UnionBudget | #Budget2018;
சென்னை
2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இதை தாக்கல் செய்கிறார்.
அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதால், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும். தேர்தலுக்கு பிறகு அமையும் அரசுதான் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். எனவே, தேர்தலுக்கு முந்தைய கடைசி முழுமையான பட்ஜெட் இதுவாகும்.
மேலும், சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமலுக்கு வந்த பிறகு தாக்கல் செய்யப்படும் முதலாவது பட்ஜெட்டும் இதுதான்.
பட்ஜெட் தாக்கல் செய்ய நாடாளுமன்றத்திற்கு வந்தார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி. படஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக அமைச்சர்வை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு அனுமதி வழங்கபட்டது. இதை தொடர்ந்து அருண் ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த வருட பட்ஜெட்டில் தென்னிந்தியாவுக்கு எந்த வித திட்டங்களும் இல்லை. தென்னிந்தியா மிகவும் அதிக அளவில் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. தென்னிந்தியாவில் இருக்கும் மூன்று மாநிலங்களுக்கு முக்கியமான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு மட்டுமே தென்னிந்தியாவில் சில நலத்திட்டங்களை பெற்று இருக்கிறது. கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மோசமாக புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது என பல்வேறு தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
#BJP | #UnionBudget | #Budget2018 | #IndianEconomy #Farmers | #Agriculture #Vegetables #ArunJaitley #Railway #Cellphone # Southindia