விமான விபத்துக்கு பின் நேதாஜிக்கு நடந்தது பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்; மம்தா பானர்ஜி

விமான விபத்திற்கு பின் நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை தெரிந்து கொள்வதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Update: 2018-09-18 09:16 GMT

கொல்கத்தா,

இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கடந்த 1945ம் ஆண்டு ஆகஸ்டு 18ந்தேதி நடந்த விமான விபத்தில் சிக்கினார்.  அதன்பின் அவர் என்ன ஆனார் என்பது மர்மம் நிறைந்த ஒன்றாக உள்ளது.

இதுபற்றி பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு ஆவணங்களை கடந்த 2015ம் ஆண்டு ஜனவரியில் வெளியிட்டது.  இதேபோன்று கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் 18ந்தேதி மேற்கு வங்காள அரசும் இது தொடர்புடைய 64 ஆவணங்களை வெளியிட்டது.

இந்த நிலையில், இதனை நினைவுப்படுத்தும் வகையில் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், எங்களுடைய அரசு கடந்த 2015ம் ஆண்டு இதே நாளில் நேதாஜி ஆவணங்களை வெளியிட்டது.  தைஹோகு விமான விபத்திற்கு பின் நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு என்ன நடந்தது?  இதுபற்றிய உண்மையை அறிந்து கொள்வதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்