மராட்டியம்: பெண்ணை அடித்துக்கொன்ற புலி - அதிர்ச்சி சம்பவம்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-12-14 13:05 IST

மும்பை,

மராட்டிய மாநிலம் சந்திரபூர் மாவட்டம் சிந்த்வாகி கிராமத்தை சேர்ந்த பெண் அருணா (வயது 45). இவர் நேற்று கிராமத்திற்கு அருகே உள்ள பருத்தி காட்டிற்கு பருத்தி எடுக்க சென்றுள்ளார்.

இந்நிலையில், வனப்பகுதிக்கு அருகே உள்ள அந்த பருத்தி காட்டிற்கு சென்ற போது அருணாவை புலி அடித்துக்கொன்றுள்ளது. பருத்தி காட்டிற்கு சென்ற அருணா வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை தேடியுள்ளனர். அப்போது, பருத்தி காட்டிற்கு செல்லும் வழியில் வனப்பகுதியில் புலி தாக்கி அருணா சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து போலீசார், வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், அருணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்