பஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி - ராஜ்நாத் இரங்கல்

பஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Update: 2018-10-19 15:40 GMT
புதுடெல்லி,

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் ரயில் விபத்தில் 50 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்து வருத்தம் அளிக்கிறது. இதயத்தை உருக்குகிறது என்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியதாவது:

அமிர்தசரஸ் அருகே ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

அமிர்தசரஸ் அருகே ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார். ரயில் விபத்து ஏற்பட்ட அமிர்தசரஸ்க்கு நாளை பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் செல்கிறார்.

மேலும் செய்திகள்