அனுமன் சாதியை கண்டுபிடிக்க முயல்வது முட்டாள்தனம் சிவசேனா கண்டனம்

அனுமன் சாதியை கண்டுபிடிக்க முயல்வது முட்டாள்தனமானது என்று சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2018-12-23 00:01 GMT
மும்பை, 

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், அனுமன் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்று கூறினார். தொடர்ந்து அம்மாநில பா.ஜ.க.வினர் அனுமன் முஸ்லிம் என்றும், ஜாட் சமுதாயத்தை சேர்ந்தவர் என்றும், ஜெயின் சமூகத்தவர் என்றும் பலவாறு கூறிவருகின்றனர். இதற்கு பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் இதுபற்றி எழுதியிருப்பதாவது:-

இந்த விவாதம் தேவையற்றது, அர்த்தமற்றது. உத்தரபிரதேச அரசு புதிய ராமாயணத்தை அதன் முக்கிய பாத்திரங்களுக்கு சாதி முத்திரையுடன் எழுத முயற்சிக்கிறது. அயோத்தியில் ராமர் கோவிலை இன்னும் கட்டவில்லை. ஆனால் விசுவாசம் மற்றும் பக்தியின் வடிவமான அனுமன் சாதி பற்றி பா.ஜனதா விவாதத்தை தொடங்கியுள்ளது. அனுமன் சாதியை கண்டுபிடிக்க முயல்வது முட்டாள்தனமானது. தங்களை இந்துக்களின் பாதுகாவலர் என்று கூறிக்கொள்பவர்கள் மவுனமாக இருக்கிறார்கள். முஸ்லிம்களோ, முற்போக்குவாதிகளோ இதை கூறினால் இந்துக்களின் பாதுகாவலர்கள் அமளியில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அதில் எழுதப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்