திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ. 1 கோடி காணிக்கை அளித்த பக்தர் - கல்விக்கு பயன்படுத்த வேண்டுகோள்

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ் பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது.;

Update:2025-12-31 18:27 IST

திருப்பதி

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ் பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், பக்தர்கள் கோவிலுக்கு காணிக்கையும் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த லாவு ரத்தையா என்ற பக்தர் ரூ. 1 கோடி காணிக்கை அளித்துள்ளார். இந்த காணிக்கை தொகையை திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானம்கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவியர்களின் கல்விக்கு பயன்படுத்துமாறு அந்த பக்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்