அசாம்: மாந்திரீகத்தில் ஈடுபட்டதாக கூறி தம்பதி உயிருடன் எரித்து கொலை
போலீசார் வந்து பார்த்தபோது தம்பதியின் உடல் முழுவதும் எரிந்து சாம்பலாகியிருந்தது.;
திஸ்பூர்,
அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள பெலுகுரி முண்டா என்ற கிராமத்தை சேர்ந்தவர் கார்டி பிருவா(43). இவரது மனைவி மிரா பிருவா(33). இவர்கள் இருவரும் மாந்திரீகம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தாக கிராம மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து கார்டி பிருவாவின் வீட்டை அடித்து நொறுக்கினர். பின்னர் கார்டி பிருவா மற்றும் அவரது மனைவி மிரா ஆகிய இருவரையும் அவர்களின் வீட்டு வாசலில் வைத்து கடுமையாக தாக்கியதோடு, அவர்கள் மீது தீயை கொளுத்தினர்.
இது குறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் வந்து பார்த்தபோது தம்பதியின் உடல் முழுவதும் எரிந்து சாம்பலாகியிருந்தது. அங்கிருந்து கொலைக்கான தடயங்களை சேகரித்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.