சபரிமலை கோவிலுக்கு புனித தங்க அங்கி கொண்டு வரப்பட்டது

சபரிமலை கோவிலுக்கு புனித தங்க அங்கி இன்று மாலை கொண்டு வரப்பட்டது.

Update: 2018-12-26 15:29 GMT
சபரிமலை,

சபரிமலை கோவிலில் அய்யப்பனுக்கு சார்த்துவதற்காக கடந்த 4 நாட்களுக்கு முன் ஆரன்முலாவில் உள்ள ஸ்ரீபார்த்தசாரதி கோவிலில் இருந்து தங்க அங்கி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

இது இன்று மாலை 6.30 மணியளவில் சபரிமலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.  இந்த புனித தங்க அங்கியானது நாளை நடைபெறும் மண்டல பூஜையில் சுவாமி அய்யப்பனுக்கு சார்த்தப்படும்.  நாளை மாலை நடைபெறும் அத்தாழ பூஜையினை அடுத்து கோவில் 2 நாட்கள் மூடப்படும்.

இதன்பின் மகர விளக்கு பூஜைக்காக வருகிற 30ந்தேதி கோவில் திறக்கப்படும்.  கடந்த வருடத்துடன் ஒப்பிடும்பொழுது இந்த வருடம் வருவாய் குறைவாக உள்ளது.  இந்த வருடம் ரூ.106 கோடி வருவாய் கிடைத்துள்ளது.  இது கடந்த வருடம் ரூ.160 கோடியாக இருந்தது.  மகரவிளக்கு பூஜை முடிந்தபின்னர் கடந்த வருட வருவாயை இது எட்டி விடும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்