2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் வாக்களிக்கும் உரிமையை ரத்து செய்ய யோகா குரு ராம்தேவ் கோரிக்கை

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை ரத்து செய்ய யோகா குரு ராம்தேவ் கோரிக்கை வைத்து உள்ளார்.

Update: 2019-01-24 05:09 GMT
புதுடெல்லி,

இரண்டு குழந்தைகளுக்கும் அதிகமான குழந்தை பெற்றால் அவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை ரத்து செய்யலாம் என்ற மத்திய அரசுக்கு  புதிய ஆலோசனையை வழங்கியுள்ளார் யோகா குரு ராம் தேவ்.

இது குறித்து யோகா குரு ராம் தேவ் கூறியதாவது:-

நாட்டின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டுமானால், இந்துவோ அல்லது முஸ்லிமோ 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள  கூடாது. அவ்வாறு 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்பவர்களின் ஓட்டுரிமை, அரசு வேலை, அரசு மருத்துவ வசதிகள் ஆகியவற்றை பறிக்க வேண்டும். அத்தகையவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. அரசு பள்ளிகள், அரசு மருத்துவமனைகளை அவர்கள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. அவர்களுக்கு அரசு வேலையும் தரக்கூடாது. அப்போது தான் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியும். அப்படி செய்தால் மக்கள் தொகை தானாக குறைந்து விடும் என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்