காடெல்லாம் வெள்ளம்... வீட்டிற்குள் புகுந்து ஓய்வெடுத்த புலி...

அசாமில் வெள்ளம் காரணமாக காட்டுப்பகுதியும் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது.

Update: 2019-07-18 10:43 GMT
அசாமில் கனமழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் அங்கு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள கசிரங்கா தேசிய பூங்கா 95 சதவீதம் வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. அங்கு வெள்ளத்திற்கு பின்னர் வனவிலங்குகள் உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளது. 17 விலங்குகள் பலியாகியுள்ளன எனவும் அதில் 9 விலங்குகள் வாகன விபத்து காரணமாக உயிரிழந்துள்ளன. இந்நிலையில் வெள்ளம் காரணமாக வீட்டிற்குள் புகுந்த புலியொன்று கட்டிலில் படுத்து ஓய்வெடுக்கும் காட்சி அடங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. புலியை மீண்டும் பத்திரமாக காட்டுக்குள் அனுப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்