நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2019-07-20 21:45 GMT
மண்டியா,

கர்நாடகாவில் உள்ள கபினி அணையின் நீர்பிடிப்பு பகுதியான கேரள மாநிலம் வயநாட்டிலும், கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்) அணையின் நீர்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி கே.ஆர்.எஸ். அணையில் இருந்து நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்பட்டது. நேற்று காலை இது 3,199 கனஅடியாக உயர்த்தப்பட்டது.

இதேபோல, நேற்று காலை முதல் கபினி அணையில் இருந்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 5,199 கனஅடி வீதம் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் காவிரி ஆற்றில் இருபுற கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் தமிழகத்திற்கு சீறிப்பாய்ந்து செல்கிறது.

மேலும் செய்திகள்