ஜம்மு காஷ்மீரில் பதற்றம் ஏற்பட பாகிஸ்தான் முயற்சிகள் செய்த போதிலும் உயிர் இழப்பு எதுவும் இல்லை - தலைமை செயலாளர்

ஜம்மு காஷ்மீரில் பதற்றம் ஏற்பட பாகிஸ்தான் முயற்சிகள் செய்த போதிலும் உயிர் இழப்பு எதுவும் இல்லை என ஜம்மு காஷ்மீர் தலைமை செயலாளர் பி.வி.ஆர். சுப்ரமண்யம் கூறினார்.

Update: 2019-08-16 10:24 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் தலைமை செயலாளர் பி.வி.ஆர். சுப்ரமண்யம் ஸ்ரீநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வார இறுதி பகுதிக்குப் பிறகு பள்ளிகள் ஏரியா வாரியாக திறக்கப்படும். மக்களுக்கான பொது போக்குவரத்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசாங்க அலுவலகங்கள் இன்று முதல் செயல்படுகின்றன. தொலைத்தொடர்பு இணைப்பு படிப்படியாக தளர்த்தப்பட்டு ஒவ்வொரு  கட்டமாக மீட்டமைக்கப்படும்.

சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பதற்கே  சட்ட விதிகளின்படி ஒரு சில தனிநபர்கள்  தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகள் முழுமையாக இயங்குகின்றன, கடந்த காலங்களிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் நடந்துள்ளன. தடுப்புக்காவல்கள் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு மதிப்பீடுகளின் அடிப்படையில் தகுந்த  முடிவுகள் எடுக்கப்படும்.

கடந்த பதினைந்து நாட்களில் எடுக்கப்பட்ட முடிவை அமல்படுத்துவதில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு அரசாங்கம் சில தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. செயற்கைக்கோள் மற்றும் கேபிள் டிவி இணைப்புகள் செயல்பாட்டில் உள்ளன.

22 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் அமைதியாக உள்ளன. 5 மாவட்டங்களில் சில வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளன.

ஜம்மு காஷ்மீரில் பதற்றம் ஏற்பட பாகிஸ்தான் முயற்சிகள் செய்த போதிலும் உயிர் இழப்பு எதுவும் இல்லை.

ஜம்மு காஷ்மீர் இயல்புநிலைக்கு விரைவாக திரும்புவதில் அரசு கவனம் செலுத்துகிறது. அதே நேரத்தில் பயங்கரவாத சக்திகள் கடந்த காலங்களைப் போல அழிவை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்பதை உறுதி செய்கிறது என கூறினார்.

மேலும் செய்திகள்