மாநிலங்களுக்கு வரி பங்கை வழங்க முடியாத நிலை; மத்திய அரசிடம் நிதி இல்லை - காங்கிரஸ் குற்றச்சாட்டு

நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 26 காலாண்டுகளில் இல்லாத வகையில் 4.5 சதவீதமாக சரிவு அடைந்துள்ளது.

Update: 2019-11-30 23:00 GMT
சண்டிகார், 

காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா சண்டிகாரில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் தற்போது நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலையைப் போன்றதொரு நிலை நிலவி வருவதாக குற்றம் சாட்டினார்.

மேலும் அவர் கூறும்போது, “மாநில அரசுகளுக்கு சேர வேண்டிய சரக்கு, சேவை வரி பங்கை மத்திய அரசு ஏன் வழங்கவில்லை? நாட்டின் நிதி பற்றாக்குறை ரூ. 7.2 லட்சம் கோடியாக இருக்கும் என்று பட்ஜெட் மதிப்பீடு கூறி உள்ள நிலையில், அக்டோபர் இறுதியில் நிதி பற்றாக்குறை 102.4 சதவீதம் என்ற நிலையை அடைந்துள்ளது” என்றார்.

மேலும், “மத்திய அரசிடம் நிதி இல்லாததால்தான் மாநில அரசுகளுக்கு சரக்கு, சேவை வரிக்கான பங்கை தர வில்லை என்பதே இதன் பொருள்” எனவும் கூறினார். 

மேலும் செய்திகள்