டெல்லி விமான நிலையத்தில் கைக்குழந்தையுடன் சென்ற பயணியை தாக்கிய ஏர் இந்தியா விமானி

இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.;

Update:2025-12-20 15:43 IST

டெல்லி,

தலைநகர் டெல்லியை சேர்ந்தவர் அங்கித் திவான். இவர் தனது 4 மாத கைக்குழந்தை, குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாட வெளியூர் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி, ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் டிக்கெட் புக் செய்துள்ளார்.

இதையடுத்து, அங்கித் இன்று தனது குடும்பத்துடன் டெல்லி விமான நிலையம் வந்துள்ளார். அவர் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏறுவதற்காக விமான நிலையத்தின் 1வது முனையத்திற்கு சென்றுள்ளார். அங்கு பிற பயணிகளுடன் அங்கித் குடும்பத்துடன் காத்து நின்றுள்ளார்.

இந்நிலையில், அங்கித் கைக்குழந்தையுடன் காத்து நின்றதையடுத்து விமான நிலைய ஊழியர்கள் அங்கித் மற்றும் அவரின் குடும்பத்தினரை விமான ஊழியர்கள் பயன்படுத்தும் பாதையில் நடத்து சென்று விமானத்தில் ஏறுமாறு கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அங்கித் தனது குழந்தை, குடும்பத்துடன் அந்த பாதையில் நடத்து சென்றுள்ளார்.

அப்போது, அந்த பாதையில் வந்த ஏர் இந்தியா விமான நிறுவத்தின் விமானி வீரேந்தர் , அங்கித்தை தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும், இது விமான நிறுவன ஊழியர்கள் பயன்படுத்தும் பாதை, பயணிகளுக்கு அனுமதியில்லை என கூறி அங்கித்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் விமானி வீரேந்தர் பயணி அங்கித்தை தாக்கியுள்ளார். இதில் அங்கித்தின் கன்னத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக விமானி விரேந்தரை பணியில் இருந்து நீக்கி ஏர் இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், விரேந்தர் மீது ஏர் இந்தியா விசாரணை தொடங்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்