பா.ஜனதா எம்.எல்.ஏ. மீதான உன்னாவ் கற்பழிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு

பா.ஜனதா எம்.எல்.ஏ. மீதான உன்னாவ் கற்பழிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

Update: 2019-12-15 22:45 GMT
புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் பங்கர்மா தொகுதியில் பா.ஜனதா சார்பில் 4 தடவை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் குல்தீப்சிங் செங்கார். இவர் தன்னை கடத்திச்சென்று கற்பழித்து விட்டதாக, உன்னாவ் நகரைச் சேர்ந்த ஒரு இளம்பெண், கடந்த 2017-ம் ஆண்டு குற்றம் சாட்டினார். அதன்பேரில் செங்காரும், அவருடைய கூட்டாளி சாஷி சிங் என்பவரும் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆகஸ்டு மாதம், செங்கார் எம்.எல்.ஏ., பா.ஜனதாவில் இருந்து நீக்கப்பட்டார்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில், இந்த கற்பழிப்பு வழக்கு விசாரணை, லக்னோ கோர்ட்டில் இருந்து டெல்லியில் உள்ள மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. கடந்த ஆகஸ்டு 5-ந் தேதியில் இருந்து தினந்தோறும் விசாரணை நடந்து வந்தது.

இறுதி வாதம் முடிந்தநிலையில், டிசம்பர் 16-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி தர்மேஷ் சர்மா ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி, இவ்வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது. இதற்கிடையே, கடந்த ஜூலை மாதம், உன்னாவ் இளம்பெண் கார் விபத்தில் சிக்கியது தொடர்பாக செங்கார் எம்.எல்.ஏ. மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கிறது.

மேலும் செய்திகள்