படுக்கையில் சிறுநீர் கழித்ததால் 5 வயது சிறுமிக்கு சூடு வைத்த வளர்ப்பு தாய் கைது

அங்கன்வாடி மையத்தில் சிறுமி உட்கார முடியாமல் சிரமப்பட்டாள்.;

Update:2026-01-10 05:51 IST

திருவனந்தபுரம்,

நேபாளத்தை சேர்ந்தவர் முகமது இம்தியாஸ். இவருக்கு 5 வயதில் மகள் உள்ளாள். இதற்கிடையே முகமது இம்தியாஸ், பீகார் மாநிலத்தை சேர்ந்த நூர் நாசர் என்கிற ரூபி (வயது 35) என்பவரை 2-வது திருமணம் செய்துகொண்டார். முகமது இம்தியாஸ் தனது மனைவி, மகளுடன் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு அருகே கிழக்கேமுறி பகுதியில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில், அங்கன்வாடி மையத்தில் இருந்த 5 வயது சிறுமி உட்கார முடியாமல் சிரமப்பட்டாள். இதை பார்த்த அங்கன்வாடி பணியாளர் சிறுமியிடம் கேட்ட போது, படுக்கையில் சிறுநீர் கழித்ததாக கூறி வளர்ப்பு தாய் உடலில் சூடு வைத்ததாக கூறினாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பணியாளர், இதுகுறித்து வாளையார் போலீசாரிடம் தெரிவித்தார்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜீவ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் படுக்கையில் சிறுநீர் கழித்ததாக கூறி சிறுமியை தொடர்ந்து ரூபி சூடு வைத்து துன்புறுத்தி வந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக முகமது இம்தியாசிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்