கடந்த நிதியாண்டில் பாஜகவின் வருவாய் 2,410 கோடி ரூபாய் ஆக உயர்வு

கடந்த நிதியாண்டில் பாஜகவின் வருவாய் 2 மடங்கும், காங்கிரசின் வருவாய் 4.5 மடங்கும் உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2020-01-10 10:06 GMT
புதுடெல்லி

அரசியல் கட்சிகள் தங்களுக்கு கிடைக்கும் வருவாய் குறித்த தகவல்களை ஆண்டுதோறும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்கின்றன. அந்த வகையில் கடந்த நிதியாண்டில் பாஜகவின் வருவாய், அதற்கு முந்தைய ஆண்டைவிட 134 சதவீதம் அதிகரித்து 2 ஆயிரத்து 410 கோடி ரூபாய் ஆக உயர்ந்துள்ளது.

இதில் தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் ஆயிரத்து 450 கோடி ரூபாய் வந்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் பாஜக செலவு செய்த தொகை ஆயிரத்து 5 கோடி ரூபாய். அதற்கு முந்தைய ஆண்டில் பாஜக 758 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதோடு ஒப்பிடும்போது செலவு 32 சதவீதம் அதிகரித்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு கடந்த நிதியாண்டில் 918 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளது, அதில் அந்த கட்சி 470 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது. தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு 383 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது. காங்கிரசின் வருவாய் 4.5 மடங்கு உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்