திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3¾ கோடி
இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 8 மணிநேரம் ஆனதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.;
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 76 ஆயிரத்து 820 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 24 ஆயிரத்து 368 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று அறிவிக்கப்பட்ட ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 77 லட்சம்.
திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 8 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பினர். ‘டைம் ஸ்லாட்’ டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 8 மணிநேரம் ஆனதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.