வெனிசுலாவில் அரசியல் கைதிகள் விடுவிப்பு நடவடிக்கை மந்தம்

வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டார்.;

Update:2026-01-12 08:54 IST

கரகாஸ்,

2024-ம் ஆண்டு வெனிசுலாவில் பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்ததாகக்கூறி அரசியல் எதிர்க்கட்சியினர், பத்திரிகையாளர்கள், மனித உரிமை வக்கீல்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி அமெரிக்கா ராணுவத்தினர் கரகாசுக்குள் ஊடுருவி அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்து நாடு கடத்தி நியூயார்க் சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து அந்த நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக போராடிய அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அழுத்தம் கொடுத்தார். அதனடிப்படையில் வெனிசுலாவில் நல்லெண்ண அடிப்படையில் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கைதிகளின் உறவினர்கள் சிறைக்கு முன்பாக 3 நாட்களாக தொடர்ந்து காத்திருந்து வருகிறார்கள்.

2024-ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் 830 பேர் கைது செய்யப்பட்டநிலையில் இதுவரை 16 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர். மந்தக்கதியில் கைதிகள் விடுவிப்பு நடவடிக்கை நடைபெறுவதால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்