நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தமிழக அரசுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த தமிழக அரசுக்கு எதிரான மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Update: 2020-02-10 21:49 GMT
புதுடெல்லி,

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மீது வக்கீல் சி.ஆர்.ஜெயசுகின் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், “சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தியது. ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தவில்லை. இது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அவமதிக் கும் செயலாகும். எனவே தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும், இந்த விவகாரத்தில் கோர்ட்டு அவமதிப்புக்கான முகாந்திரம் ஏதும் இல்லை என்று கூறிய நீதிபதிகள், மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தனர்.

மேலும் செய்திகள்