டிரம்ப் வருகை எதிரொலி ; மொடேரா பகுதி குடிசைவாசிகள் காலி செய்ய அகமதாபாத் நகராட்சி நோட்டீஸ் ?

டிரம்ப் வருகையை முன்னிட்டு மொடேரா பகுதி குடிசைவாசிகள் காலி செய்ய அகமதாபாத் நகராட்சி நோட்டீஸ் அனுப்பியதாக குடியிருப்பு வாசிகள் மத்தியில் புகார் முன்வைக்கப்படுகிறது.

Update: 2020-02-18 07:03 GMT
அகமதாபாத், 

 அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் அரசு பயணமாக இந்தியா வருகிறார். வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் அவர் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். 24 ஆம் தேதி குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதால், டிரம்ப் பயணிக்கும் வழிகளில், அவரை கவரும் வகையில் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.  

இந்த நிலையில், டிரம்ப் வருகையை முன்னிட்டு மொடேரா பகுதி குடிசை வாசிகள் 7 நாட்களில் காலி செய்யுமாறு அகமதாபத் நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அளித்துள்ளது.  சுமார் 45 குடும்பத்தினர் அப்பகுதியில் வசித்து வரும் நிலையில், அவர்களை வெளியேறுமாறு நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குடியிருப்பு வாசிகள் தங்களை வெளியேறுமாறு அதிகாரிகள் கூறியதாக தெரிவித்து வரும் நிலையில், நகராட்சி நிர்வாகிகள் அதுபோன்ற எந்த நோட்டீசையும் அனுப்பவில்லை என்று மறுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்