டெல்லியில் இன்று மேலும் 2,442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் இன்று மேலும் 2,442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-01 15:45 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனா பாதிப்புகளில் மராட்டியத்திற்கு அடுத்தபடியாக தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து மூன்றாவது இடத்தில் தலைநகர் டெல்லி உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் இன்று மேலும் 2442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 89,802 ஆக உயர்ந்து உள்ளது. டெல்லியில் இன்று ஒரே நாளில் 61 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 2,803 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. இதேபோன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 59 ஆயிரத்து 992 ஆகவும், 27,007 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்றும் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகள்