சுஷாந்த் மரண வழக்கை விசாரிக்க மும்பை வந்த பீகார் ஐபிஎஸ் அதிகாரி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு

சுஷாந்த் மரண வழக்கை விசாரிக்க மும்பை வந்த பீகார் ஐபிஎஸ் அதிகாரி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-08-03 04:12 GMT
மும்பை,

கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை கதையில் நடித்து பிரபலமான இளம் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் சமீபத்தில் தற்கொலை செய்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுவரை 40-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக சுஷாந்த் சிங் தற்கொலைக்கு அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி தான் காரணம் என்று சுஷாந்த் சிங்கின் தந்தை பாட்னா போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் சுஷாந்த் சிங்கிடம் பண மோசடி செய்ததாகவும் புகாரில் கூறியுள்ளார். இதையடுத்து பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்காக பாட்னா போலீசார் சிலர் மும்பையில் ஏற்கனவே முகாமிட்டுள்ளனர்.

சுஷாந்த் மரண வழக்கில் பாட்னா போலீசாருக்கு மும்பை போலீசார் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று பரவலாக பீகார் அரசியல் தலைவர்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலையில், பீகாரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி வினய் திவாரி, வழக்கை விசாரிக்க மும்பை வந்தார். ஆனால், மும்பை வந்த அவரை மும்பை  மாநகராட்சி அதிகாரிகள் கட்டாயமாக தனிமைப்படுத்தினர்.14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்கு அடையாளமாக கையில்  முத்திரையும் குத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்