மும்பை செல்லும் விமான பயணிகள் 14 நாள் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருப்பது கட்டாயம்

நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மும்பை செல்லும் விமான பயணிகள் 14 நாள் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.;

Update:2020-08-07 11:24 IST
மும்பை,

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இவற்றில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது.  மராட்டியத்தின் மும்பை நகரம் அதிக பாதிப்புகளை சந்தித்து உள்ளது.  இதனை முன்னிட்டு மும்பை மாநகராட்சி தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கி உள்ளன.

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாட்டின் பிற பகுதிகளில் இருந்து விமானத்தில் பயணித்து மும்பை வந்து இறங்கும் விமான பயணிகள் அனைவரும் தங்களை 14 நாட்கள் வரை வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வது கட்டாயம் என அறிவித்து உள்ளது.

இதில் இருந்து விலக்கு பெற விரும்பும் அரசு அதிகாரிகள், மும்பை மாநகராட்சியின் வேலை நாட்களில், மும்பைக்கு சென்று சேர்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே அதுபற்றி தெரிவித்திருக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்