காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவர் - போலீஸ் ஐ.ஜி. தகவல்

காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவர் என காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.

Update: 2020-08-20 21:30 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று முன்தினம் துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் ஒருவர் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தலைமை தளபதி நசீர் யு தின் லோன் ஆவார்.

இதுகுறித்து காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி. விஜயகுமார் கூறுகையில், ‘சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவர். கடந்த ஏப்ரல் 18-ந்தேதி 3 சி.ஆர்.பி.எப். வீரர்களையும், கடந்த மே 4-ந்தேதி மேலும் 3 சி.ஆர்.பி.எப். வீரர்களையும் கொன்ற சம்பவத்தில் தொடர்புடையவர். மேலும் ஒரு வீரரிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கியையும் அவர் எடுத்து சென்றார். இத்தனை சம்பவங்களுக்கும் காரணமான பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டது காஷ்மீர் வீரர்களின் சாதனையாகும்’ என்று கூறினார்.

இதுதொடர்பாக காஷ்மீர் போலீஸ் துறையின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில், ‘சி.ஆர்.பி.எப். வீரர்கள் மரணத்திற்கு நீதி கிடைத்துள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்