பீகாரில் 5 மாதங்களுக்குப் பிறகு பேருந்து சேவை இன்று தொடக்கம்

பீகாரில் 5 மாதங்களுக்குப் பிறகு பேருந்து சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளன.

Update: 2020-08-25 15:17 GMT
பாட்னா,

பீகாரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,22,684ஆக உள்ளது. அவர்களுள் 1,01,292 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 21,392 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் செப்டம்பர் 6ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து நிறுத்தப்பட்ட பேருந்து போக்குவரத்து முடக்கப்பட்டது. இது மக்களுக்கு பெருமளவில் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. 

இந்நிலையில் பீகாரில் 5 மாதங்களுக்குப் பிறகு பேருந்து போக்குவரத்தை தற்போது மீண்டும் மாநில அரசு இன்று தொடங்கியுள்ளது. பேருந்து போக்குவரத்து தொடங்கியதற்கு அம்மாநில மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். 

மேலும் பயணிகள், ஓட்டுநர்கள் மற்றும் பேருந்துகளின் நடத்துனர்கள் முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளி கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்று அறிவுறித்தியுள்ளனர்.

அதனை தொடர்ந்து பயணிகள், ஓட்டுநர்கள் மற்றும் பேருந்துகளின் நடத்துனர்கள் சமுக இடைவெளியை பின்பற்றுகிறார்களா என்று அம்மாநில காவல்துறை கன்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்