நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நடந்து கொண்ட விதம் ஜனநாயகத்துக்கு வெட்கக்கேடானது மாயாவதி கருத்து

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நடந்து கொண்ட விதம் ஜனநாயகத்துக்கு வெட்கக்கேடானது என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-23 19:48 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பியும், சபை விதிமுறை புத்தகங்களை கிழித்து வீசியும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் 8 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, ஜனநாயகத்தின் கோவிலாக விளங்கும் நாடாளுமன்றத்தில் அரசு செயல்படும் விதமும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடந்து கொண்ட முறையும் நாடாளுமன்றம், அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயகத்தின் கண்ணியத்தை குலைக்கும் வெட்கக்கேடான செயல் என்றும், இது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்